இதில் pendrive இல்நாம் pendrive வைநமதுகணினியில்போடும்போது, அது autorun ஆகும் , இதனால்வைரஸ்பரவும்அபாயம்உண்டு , மேலும் , சிலநேரங்களில்நாம் eject செய்யும்போதுஅல்லது format செய்யும்போது , அதுஆகாமல்போகலாம் , அந்தநேரங்களில்தான்இந்தசாப்ட்வேர்நமக்குஉதவுகிறது , முதலில்இங்குசென்றுஇதைdownload செய்யவும் ,பிறகுரன்செய்து All programs சென்றுஅதில்நாம் run செய்த software இல்சென்றுஒரு sortcut ஐகானை , நமதுடெஸ்க்டாப்பில்வரவைத்துவிடவும் ,பிறகு, அதைஓபன்செய்தால்கீழேஇருப்பதுபோல்வரும் ,
அதில் , My computer என்றுஇருப்பதில்டபுள்கிளிக்செய்து ,
இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி பலர் வெளியே சொல்லாமலே இருந்துவிடுகின்றனர். பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன. இன்டர்நெட் மற்றும் இமெயில்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இவற்றைத் தவிர்க்குமாறு காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. இன்னும் புதுவிதமான வழிகளில் யாருக்கேனும் மெயில்கள் வந்தாலோ அல்லது தாங்கள் ஏமாற்றப்பட்டாலோ அவர்கள் கம்ப்யூட்டர் மலர் முகவரிக்குத் தெரிவிக்கலாம். அவர்களின் அடையாளம் தெரிவிக்கப்படாமல் பொதுமக்களின் நன்மை கருதி அவை வெளியிடப்படும்.
1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank ) வந்தது போல இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில் சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக் செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில் அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். பின் பக்கம் பக்கமாகச் சிறுகச் சிறுக தகவல்கள் வாங்கப்படும். உங்கள் பெயர், ஊர், முகவரி, வங்கி அக்கவுண்ட் எண் , இன்டர்நெட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட்,ஆகியவை பெறப்படும். இவற்றைப் பெற்றவுடன் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் வழியாக நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும். இது போல ட்ரான்ஸ்பர் செய்யப்படும் அக்கவுண்ட் உடனே அந்த வங்கியில் மூடப்படும். பெரும்பாலும் இவை பாதுகாப்பற்ற வங்கி அக்கவுண்ட் அல்லது வெளிநாட்டு வங்கி கிளை அக்கவுண்ட்டாக இருக்கும்.
2. மேலே சொன்னது போன்ற வங்கிகளில் இருந்து, கீழ்க்கண்ட தகவல்களை உறுதிப்படுத்த நீங்கள் பலமுறை கடிதம் அனுப்பியும் முன்வரவில்லை. இதுவே இறுதி கடிதம். இன்னும் 48 மணி நேரத்தில் சரியான தகவல்களைத் தந்து அப்டேட் செய்யா விட்டால் உங்கள் அக்கவுண்ட் சேவை நிறுத்தப்படும் என நம் கழுத்தின் மீது அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற தோரணையில் கடிதம் வரும். நாம் நம் அவசர வேலைகளில் இது உண்மை என நம்பி தகவல்களை அளித்துவிடுவோம். எந்த வங்கியும் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. எனவே இது போல எந்த வங்கியின் பெயரில் மெயில் வந்தாலும் திறக்க வேண்டாம். ஆர்வத்தில் கூட இது என்னதான் பார்த்துவிடுவோமே என்று காரியத்தில் இறங்க வேண்டாம். பின் நம் பணத்திற்கு காரியம் செய்தவர்களாகிவிடுவோம்.
3. இதே போல Security Alert / Net Bank Alert என சப்ஜெக்ட் தலைப்பிட்டு, வங்கியின் சர்வர் கிராஷ் ஆகி தற்போது சரிப்படுத்தப்பட்டதாகவும், உங்கள் அக்கவுண்ட் தகவல்களைச் சரி பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்திடுமாறு கடிதங்கள் வரும். இவையும் ஏமாற்றுபவையே.
4. வங்கி முகவரியிட்டு எச்சரிக்கைக் கடிதம் போல தந்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வங்கியிலிருந்து வந்தது போல மெயில்கள் வரும்; நம்ப வேண்டாம். உண்மையான லிங்க் இதுதான். நீங்கள் கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெயில் வரும். கிளிக் செய்தால் மீண்டும் அதே கதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உங்கள் பெர்சனல் தகவல்களை இழப்பீர்கள்.
5. இமெயில் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பேர்களில், உங்களையும் சேர்த்து பல நாடுகளில் ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வெளிநாட்டுக் கார் ஒன்று பரிசாகத் தரப்போவதாக உங்களுக்கு மெயில் வரும். இதில் என்ன அக்கவுண்ட் நம்பரா தரப்போகிறோம் என்று அந்த மெயில் கூறும் இமெயில் முகவரிக்குக் கடிதம் எழுதினால், உங்களைப் போல அதிர்ஷ்டசாலி உலகிலேயே இல்லை என்ற ரேஞ்சுக்கு பல மெயில் கடிதங்கள் தொடர்ந்து வரும். அந்தக் கடிதங்களில் சின்ன சின்ன தகவல்கள் (சொந்த வீடு, மாத வருமானம், முகவரி, கார், இரு சக்கர வாகனம், கடன், பேங்க் அக்கவுண்ட் போன்றவை) சேகரிக்கப்படும். இவற்றை வைத்து நீங்கள் எவ்வளவு பணம் வரை இழக்க இருப்பீர்கள் என முடிவு செய்திடுவார்கள். பின் ஒரு நாளில், பரிசுக் காரின் மதிப்பு ரூ.89 லட்சம் என்றும் அதனை அனுப்புவதற்கான பணம் நீங்கள் முதலில் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு தொகையை நெட் பேங்கிங் மூலம் செலுத்த கேட்டுக் கொள்வார்கள். திட்டமிட்டு ஏமாற்றும் இது போன்ற மெயில்களை நம்ப வேண்டாம்.
6. இத்தகைய மோசடிகளில் மிகப் பழைய வகை மோசடி இன்றும் தொடர்கிறது. வெளிநாட்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடு ஒன்றில், ஒரு பெரும் பணக்காரர் கோடிக் கணக்கான டாலர் மதிப்புள்ள பணத்தை வங்கியில் விட்டு விட்டு இறந்துவிட்டதாகவும், அதனை மாற்றி எடுக்க நீங்கள் உதவ வேண்டும் எனவும் முதலில் மெயில் வரும். பதில் அளிக்க வேண்டிய இமெயில், போன் எண் எல்லாம் இருக்கும். நீங்கள் தொடர்பு கொண்டால் மிகவும் இரக்கத்துடனும் ஆசையைத் தூண்டும் விதமாகவும் பேசுவார்கள். பணத்தை உங்கள் அக்கவுண்ட்டில் செலுத்த அக்கவுண்ட் எண், பாஸ்வேர்டு கேட்கப்படும். அல்லது குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜாக கட்டச் சொல்லி தொலைபேசி மற்றும் மெயில் வழியாகத் தொடர்ந்து பேசுவார்கள். குறைந்த பட்ச பணமாவது கட்டச் சொல்வார்கள். கட்டியவுடன் வந்தது தான் லாபம் என்று அப்படியே அமைதியாகிவிடுவார்கள். இதே போல லண்டனில் தனியாக வாரிசு இன்றி, சொந்தம் இன்றி வசிக்கும் பெண்மணி ஒருவர் எழுதுவதாக மெயில் வரும். தான் சாகப் போவதாகவும், தன் அளவிட முடியாத சொத்தினை இந்தியாவில் ஒருவருக்குக் கொடுத்து தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக அதில் குறிப்பிடப் பட்டிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் நீங்களும் ஒருவர் என்றும், உங்களை தத்து எடுத்த பின்னரே சொத்துக்களைத் தர முடியும் என்றும் தேன் தடவாத குறையாக மெயில் வரும். ஏமாந்தால் நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் போய்விடும்.
7. வெளிநாட்டில் வேலை தருகிறேன் என்று சி.வி. வாங்கி பதிவதற்குப் பணம் கட்டு, உங்களுடைய, திறமை அபாரம், ஏன் இன்னும் இந்தியாவில் இருக்கிறீர்கள், விசாவிற்கான பணம் மட்டும் கட்டுங்கள், இமெயில் வழியே டாகுமெண்ட் தயார் செய்து கொடுங்கள், அதற்கு முன் எங்கள் நிறுவனத்தில் 500 டாலர் கட்டிப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் வரும் மெயில்களை நம்பாதீர்கள்.
8. நிறுவனத்தின் பெயர், லோகோ போட்டு மெயில் வரும். எங்கள் நிறுவனத்திற்கு உங்கள் நாட்டின் அருகே உள்ள நாடுகளிலிருந்து பணம் தொடர்ந்து வரும். அதனை உங்கள் அக்கவுண்ட்டிற்கு அனுப்பச் சொல்கிறோம். நீங்கள் மொத்தமாக எங்கள் அக்கவுண்ட்டிற்கு மாற்ற வேண்டும். இந்த வேலைக்கு மாதச் சம்பளமும் மாற்றும் பணத்திற்கேற்ப கமிஷனும், அலுவலகச் செலவிற்குப் பணமும், எங்களின் ரீஜனல் மேனேஜர் என்ற பதவியும் தருவதாக மெயில் வரும். உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைக் கொடுத்தால் எந்த நாட்டு வங்கிக்கோ உங்கள் பணம் நீங்கள் அறியாமலேயே மாற்றப்பட்டுவிடும். இது போன்ற ஏமாற்று வேலைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் ஏமாற்று வேலைகள் உருவாகுமோ தெரிய வில்லை. அத்தனையும் தெரிந்து பின் விழிப்பாய் இருப்பதைவிட, உழைப்பின்றி வரும் பணத்தை எதிர்பார்க்காமல், அடுத்தவர் பணத்திற்கு முறையின்றி ஆசைப்படாமல் “இருப்பது போதும் ஈசனே’ என்று இருப்பது பாதுகாப்பல்லவா!
இப்போது வரும் பெரும்பாலான மென்நூல்கள்,மென்ப்பொருள் கையேடுகள் PDF கோப்புகளாக வருகிறது. PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கம் ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கோப்பில் உள்ள வாக்கியங்களை எந்த கணினியிலிருந்து படிக்கமுடியும்.அதற்கு தேவை PDF reader என்ற மென்பொருள் இருந்தால் போதும்.இது இலவசமாகவே கிடைக்கிறது.
PDF -ன் அவசியம் என்ன? நமது கணினியில் தமிழில் ஒரு எழுத்துருவை பயன்படுத்தி ஒரு ஃபைலை உருவாக்குவோம்.அதே ஃபைலை மற்றொரு கணினியில் படிப்பதற்காக திறந்தால் சதுர வடிவமாக எழுத்துக்கள் படிக்க முடியாதவாறு இருக்கும். இந்த கணினியில் தகுந்த தமிழ் எழுத்துருவை நிறுவினால் மட்டுமே நம்மால் அந்த கோப்பில் உள்ள வார்த்தைகளை படிக்க முடியும்.இந்த சிக்கலை களைவதற்க்கு தான் PDF பயன்படுகிறது. உங்கள் ஃபைலை PDF கோப்பாக மாற்றிவிட்டால் எந்த கணினியிலும் திறந்து படிக்கமுடியும்.அது மட்டும்மல்லாமல் எளிதாக ப்ரிண்ட் செய்ய்வும் முடியும். அடோப் நிறுவனத்தின் acrobat distiller மென்பொருளை கொண்டு PDF கோப்புகளை உருவாக்க/மாற்ற முடியும்.ஆனால் இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.இதுதவிர இலவசமாக கிடைக்க கூடிய PDF மென்பொருள்கள் இணையத்தில் நிறைய உள்ளன.
ஓப்பன் ஆபிஸ் PDF கோப்புகளை ஆதரிக்கும்.இதனால் ஓப்பன் ஆபிசில் நாம் உருவாக்கும் கோப்புகளை எளிதாக PDF ஆக மாற்றலாம். PDF லிருந்து Wordக்கு மாற்ற கீழ்கண்ட இணையதளத்திலிருந்து இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கணினியின் அனைத்து வன்பொருள்களுக்கு தேவையான மின்த்தேவையை தரக்கூடியது இந்த SMPS. கணினி ஒரு மின்னணு சாதனம் என்பதால் அது நேர்மின்னழுத்தத்தில் மட்டுமே இயங்கும்.அதனால் தான் நாம் இந்த SMPS -ஐ பயன்படுத்துகிறோம்.இது மாறுதிசை(AC) மின்னோட்டத்தை நேர்திசை(DC) மின்னோட்டமாக மாற்றுகிறது. SMPS-லிருந்து வரும் நேர்மின்னழுத்தம்(DC) மதர்போர்டின் மின் இணைப்பான் மூலமாக மதர்போர்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது. இந்த மின் இணைப்பான் இருவகைப்படும்.
AT Power Supply Unit
ATX Power Supply Unit
மேற் கூறப்பட்ட மின் இணைப்பானை விட பவர் சப்ளை வகைகள் கூடுதலாக இருந்தாலும் மேற் கூறப்பட்ட மின் இணைப்பான்களே தற்போது பாவணையில் உள்ளது. மேற் கூறப்பட்ட power supply unit க்கு இடையிலான வேறுபாடுகள் பின்வருமாறு AT ஆனதுதாய்பலகைஇணைப்பான் 12 pins கொண்டுஇருக்கும்ஆனால் ATX ஆனது 20 அல்லது 24 pins கொண்டுஇருக்கும். மற்றும் ATயைஇயக்கவும்நிறுத்தவும்ஒருஆழியால்மட்டும்தான்முடியும். ஆனால் ATX க்குஆழி, மென்பொருளயும்முடியும்.
AT Power Supply Unit ஒன்றில்காணப்படும்வயர்களிலிருந்துவெளிவரும்மின்னழுத்தம்.
Color
Pin
Signal
P8.1
Power Good
P8.2
+5 V
P8.3
+12 V
P8.4
−12 V
P8.5
Ground
P8.6
Ground
P9.1
Ground
P9.2
Ground
P9.3
−5 V
P9.4
+5 V
P9.5
+5 V
P9.6
+5 V
ATX Power Supply Unit ஒன்றில்காணப்படும்வயர்களிலிருந்துவெளிவரும்மின்னழுத்தம்.
24-pin ATX12V 2.x power supply connector (20-pin omits the last 4: 11, 12, 23 and 24)
Color
Signal
Pin
Pin
Signal
Color
Orange
+3.3 V
1
13
+3.3 V
Orange
+3.3 V sense
Brown
Orange
+3.3 V
2
14
−12 V
Blue
Black
Ground
3
15
Ground
Black
Red
+5 V
4
16
Power on
Green
Black
Ground
5
17
Ground
Black
Red
+5 V
6
18
Ground
Black
Black
Ground
7
19
Ground
Black
Grey
Power good
8
20
−5 V (obsolete)
White
Purple
+5 V standby
9
21
+5 V
Red
Yellow
+12 V
10
22
+5 V
Red
Yellow
+12 V
11
23
+5 V
Red
Orange
+3.3 V
12
24
Ground
Black
ஒரு பவர் சப்ளை ஒன்றில் காணப்படும் இணைப்பான்களின் பெயரும் அதனோடு பொருத்தப்படும் சாதனங்களும்.
மதர்போர்ட் இணைப்பான்(Mother Board Connector/PC main Connector) :- With Mother Board
4-பின் பவர் கணைக்டர் :- With Mother Board
மொலெக்ஸ் கணைக்டர் (Molex Connector) :- With CD Roms, Hard disks,
மினி கணைக்டர் (Mini Connector) :- With Floppy
SATA Power Connector :- With SATA CD Roms, SATA Hard Disks,
ஆறுமாதத்துக்குஒருமுறை, உபுண்டுபுதியபதிப்புகளைவெளியிடுகிறது. இதனால், புதியநுட்பங்களின்பலன்கள்நமக்குஉடனுக்குடன்கிடைக்கும். (விஸ்டாவைவெளியிடவிண்டோஸ்சித்தப்பா 6 ஆண்டுகள்கொட்டாவிவிட்டார்! அடுத்தபதிப்புஎப்பொழுதுவரும்என்றுஅவருக்கேதெரியாது ! ஆனால், எப்பொழுதுவரும்என்றுதெரியாததாலேயேஅவர் super star ஆகிவிடமுடியாது )
விண்டோசைவைத்திருப்பவர்களும்கூடுதலாகதனிவகிர்வில்உபுண்டுநிறுவிக்கொள்ளலாம். விண்டோசைஅழிக்கத்தேவைஇல்லை. வெறும் 2 GB அளவுஉள்ளவகிர்வுகூடபோதுமானது. இரட்டைஇயக்குதளங்களாகவைத்துக்கொண்டுதேவைப்படும்போதுஉபுண்டுவையும்விண்டோசையும்மாற்றிமாற்றிப்பயன்படுத்தலாம். விண்டோசில்உள்ளகோப்புகளைலினக்சில்இருந்தும்அணுகிப்பயன்படுத்தமுடியும்.
என்றால் இன்று தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய,பிரசித்திப் பெற்றவர் வேறு யாரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருள் வல்லுனரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆகிய பில் கேட் அவர்களுக்கு தற்போது வயது 52 ஆகிறது.
உலக பணக்காரர்
கள் வரிசையில் “பில் கேட்” அவர்களே தொடர்ந்தும் பல வருடங்களாக முதல் இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்
லியன்களை தாண்டியிருந்தது.
இன்று இவரது நிறுவனமான “மைக்ரோசொப்ட்” நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள் 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.
ஆம்! இத்தன்னிகரற்றச் சாதனையாளரான “பில் கேட்” அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு முறை பார்ப்போம்.
பில் கேட் அவர்கள் 1955 ஒக்டோபர் 28ம் திகதி அமெரிக்கா, சியேட்ல்,வொசிங்டன் [America, Seattle,
Washington] எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்சு' இவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயார் பெயர் 'மேரி மேக்சுவெல்' வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான 'பில் கேட்'தனது சிறு வயதிலேயே கணிதம்,அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கினார்.
தன் பதி்மூன்றாவது வயதில் சியாடிலில் சிறந்துக் காணப்பட்ட இவர் லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார்.அங்கே கல்வி கற்கும் போதே இவரது கணனி ஆர்வம் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயதிலேயே மென் பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவராகக் காணப்பட்டார்.
தனது 13ம் வயதிலேயே மெ
ன்பொருள் எழுத தொடங்கினார்.
பிறகு 1973ல் ஆவர்ட் [Harvard University] பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அவரது நண்பரான இசுடீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்து படித்தார். இக்காலப்பகுதியில் இவரது படிப்பு பாதியில் இடைநிறுத்தும் அளவிற்கு இவரது கணனி ஆர்வம் மிகுந்து காணப்பட்டது.
ஆவர்ட் பல்கலைக்கழக படிப்பு முற்றுப்பெற்ற பின்பு தனது சிறு வயது நண்பர் பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை 1975ல் ஆரம்பித்தார்.
கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்தது. இதனால் இவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொ
ருள்களை எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.
இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள்,நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு நிலை மாறியுள்ளது.
கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிசுடம்) பொருத்தவரையிலும் 85%சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே
உள்ளன.
மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமான “விண்டோசு விசுடா” 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனைக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள், 600கோடி டொலர்கள் செலவில் 5000 கணனி மென்பொருள் வல்லுநர்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. இதில் 300 இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது. இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும், அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்சு அவர்கள
தும், அவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கு முதன்மையானது என்றால் மிகையாகாது.
பொருளாதாரத்துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் பொருளாதாரத் தந்தை என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம்.
இன்று நாமெல்லாம் கணனியை பாவிப்பதற்கு வித்திடவர் இவர் என்றே கூறவேண்டும். பொதுமக்கள் மத்தியில் கணனியை அறிமுகப்படுத்தியதற்கான பில் கேட் அவர்களினதும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கு அளப்பரியது.
பில்கேட்பற்றிஇன்னுமொருதகவல்
பில் கேட் அவர்களும்
கொலின் எமிங்வே (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய“Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றன.
பில் கேட்டின் முதலாவது நூலான “The Road Ahead' 1995 ஆண்டு வெளியாகிப் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்சில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில் தொடர்ந்தும் இவரது நூல் ஏழு வாரங்கள் முன்னணியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி, எழுத்துத்
துறையிலும் தடம் பதித்தவர் பில் கேட் அவர்கள். இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி அபிவிருத்திக்கும், இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்.
இதைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார
அபிவிருத்திக்காக அறக் கட்டளையொன்றை நிறுவி அதற்காக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கி செயல்படுத்தியும் வருகின்றார். இதை“ பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்” எனும் பெயரில் இவரது மனைவியாரும் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
எனது பெயர் வ.மகிமன். நான் வவுனியாவில் உள்ள தோணிக்கல் எனும்
சிறு கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனது பொழுதுபோக்கு Net Browsing செய்வதாகும்.
அதன் நிமிர்த்தம் ஒரு வேடிக்கையாக தொடக்கப்பட்ட ஒரு இணையத் தளமே இதுவாகும். எனவே
இத்தளத்தில் பிழைகள் இருப்பின் சுட்டி காட்டுங்கள். இத்தளத்தில் கூடுதலாக கணினி
பற்றிய தகவலே தாங்கி வருகின்றது. நான் விளக்கமெல்லாம் தமிழிலே தான் போடுகின்ற
படியால் அணைவரது மனதை கொல்லை கொள்ளும் என நம்புகின்றேன். அத்துடன் இதில் இருக்கும்
பதிப்புகள் கூடுதலாக இணையத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது. என் நோக்கமானது
கணினி சம்மந்தமான விடயங்கள் அனைத்தையும் ஒரே இடத்திலயே பெற்று பயணுற வேண்டும்
என்பதாகும். எனவே எனக்கு தகவலை தந்து உதவிய அனைத்து இணைய தளங்களுக்கும் எனது
மனமறிந்த நன்றிகள். அத்துடன் உங்களது பதிப்புக்கள் இடம் பெறவேண்டும் என்றால் எனது
மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் நான் உங்கள் பெயருடன் உங்களது பதிவுகளை
பதிவு செய்கிறேன். என் மின்அஞ்சல் முகவரி mahiman1985@yahoo.com.