ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பவர் சப்ளை (power supply unit)


கணினியின் அனைத்து வன்பொருள்களுக்கு தேவையான மின்த்தேவையை தரக்கூடியது இந்த SMPS. கணினி ஒரு மின்னணு சாதனம் என்பதால் அது நேர்மின்னழுத்தத்தில் மட்டுமே இயங்கும்.அதனால் தான் நாம் இந்த SMPS -ஐ பயன்படுத்துகிறோம்.இது மாறுதிசை(AC) மின்னோட்டத்தை நேர்திசை(DC) மின்னோட்டமாக மாற்றுகிறது. SMPS-லிருந்து வரும் நேர்மின்னழுத்தம்(DC) மதர்போர்டின் மின் இணைப்பான் மூலமாக மதர்போர்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது. இந்த மின் இணைப்பான் இருவகைப்படும்.
  1. AT Power Supply Unit
  2. ATX Power Supply Unit
மேற் கூறப்பட்ட மின் இணைப்பானை விட பவர் சப்ளை வகைகள் கூடுதலாக இருந்தாலும் மேற் கூறப்பட்ட மின் இணைப்பான்களே தற்போது பாவணையில் உள்ளது. மேற் கூறப்பட்ட power supply unit க்கு இடையிலான வேறுபாடுகள் பின்வருமாறு AT ஆனது தாய் பலகை இணைப்பான் 12 pins கொண்டு இருக்கும் ஆனால் ATX ஆனது 20 அல்லது 24 pins கொண்டு இருக்கும். மற்றும் ATயை இயக்கவும் நிறுத்தவும் ஒரு ஆழியால் மட்டும் தான் முடியும். ஆனால் ATX க்கு ஆழி, மென்பொருளயும் முடியும்.

AT Power Supply Unit ஒன்றில் காணப்படும் வயர்களிலிருந்து வெளிவரும் மின்னழுத்தம்.

Color Pin Signal

P8.1 Power Good

P8.2 +5 V

P8.3 +12 V

P8.4 −12 V

P8.5 Ground

P8.6 Ground


P9.1 Ground

P9.2 Ground

P9.3 −5 V

P9.4 +5 V

P9.5 +5 V

P9.6 +5 V

ATX Power Supply Unit ஒன்றில் காணப்படும் வயர்களிலிருந்து வெளிவரும் மின்னழுத்தம்.

24-pin ATX12V 2.x power supply connector
(20-pin omits the last 4: 11, 12, 23 and 24)
Color Signal Pin Pin Signal Color
Orange +3.3 V 1 13 +3.3 V Orange
+3.3 V sense Brown
Orange +3.3 V 2 14 −12 V Blue
Black Ground 3 15 Ground Black
Red +5 V 4 16 Power on Green
Black Ground 5 17 Ground Black
Red +5 V 6 18 Ground Black
Black Ground 7 19 Ground Black
Grey Power good 8 20 −5 V (obsolete) White
Purple +5 V standby 9 21 +5 V Red
Yellow +12 V 10 22 +5 V Red
Yellow +12 V 11 23 +5 V Red
Orange +3.3 V 12 24 Ground Black

ஒரு பவர் சப்ளை ஒன்றில் காணப்படும் இணைப்பான்களின் பெயரும் அதனோடு பொருத்தப்படும் சாதனங்களும்.

  • மதர்போர்ட் இணைப்பான்(Mother Board Connector/PC main Connector) :- With Mother Board
  • 4-பின் பவர் கணைக்டர் :- With Mother Board
  • மொலெக்ஸ் கணைக்டர் (Molex Connector) :- With CD Roms, Hard disks,
  • மினி கணைக்டர் (Mini Connector) :- With Floppy
  • SATA Power Connector :- With SATA CD Roms, SATA Hard Disks,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக