ஞாயிறு, 19 ஜூலை, 2009
Firefox மொஸில்லா ரிப்ஸ்
பயர்பாக்ஸ் 3 பதிப்பு பெற்ற சாதனை விளம்பரத்திற்குப் பின் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த பிரவுசரைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்நமக்கு வரும் கடிதங்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன. பல வாசகர்கள் இந்த பிரவுசருக்கான டிப்ஸ் மற்றும் ஷார்ட் கட் கீ தொகுப்புகளைக் கேட்டு எழுதி உள்ளனர். ஏற்கனவே பல ஷார்ட் கட் கீகளுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து இவை தரப்படும். இதோ இங்கே கொஞ்சம் பார்க்கலாம்.1. தளங்களுக்கான தேடுதல் கீ வேர்ட் அமைத்தல்: பயர்பாக்ஸ் தொகுப்பில் புக் மார்க் செய்யப்பட்ட தளங்களில் தேடல் செயல்களை அந்த தளங்கள் சென்று தேடவேண்டியதில்லை.நீங்களே செட் செய்திடும் சில எழுத்துக்களை பயர்பாக்ஸ் லொகேஷன் பாரில் தந்து தேட வேண்டிய சொல்லையும் தந்தால் அந்த தளத்தின் தேடல் கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுவீர்கள். இதற்கு முதலில் அந்த இணைய தளத்திற்கு வழக்கமான முகவரி அமைத்துச் செல்லுங்கள். பின்னர் இந்த தளத்தில் வழக்கமாக நீங்கள் தேடும் சர்ச் பீல்டிற்குச் செல்லுங்கள். எடுத்துக்காட்டாக நான் http://www.tech2.com/ என்ற தளத்திற்குச் செல்வேன். இங்கே இந்த தளத்தைத் திறந்து அதில் உள்ள சர்ச் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Add a keyword for this search என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் Add bookmark விண்டோவில் இந்த தளத்தை எளிதில் நினைவில் கொள்ளும் வகையிலான எழுத்துக்களைத் தரவும். எடுத்துக் காட்டாக இந்த தளத்திற்கு t2 என வழங்கலாம். இனி அட்ரஸ் பாரில் இந்த எழுத்துக்களை அமைத்து எதனைத் தேட வேண்டுமோ அதனை அமைத்தால் நேரடியாக அந்த தளத்தின் பக்கங்கள் தேடப்பட்டு அந்த சொற்களுக்கான தகவல் கிடைக்கும். எடுத்துக்காட்டாக t2 sony என பயர்பாக்ஸ் லொகேஷன் பாரில் அமைத்தால் அந்த தளம் திறக்கப்பட்டு அதற்கான தேடல் தகவல்கள் கிடைக்கும்.2. தவறுதலாய் மூடிவிட்டீர்களா? ஏதேனும் தளம் பார்த்துக் கொண்டிருக்கையில் தவறுதலாய் அதனை மூடிவிட்டீர்களா? அந்த தளம் உடனே மீண்டும் வேண்டுமா? முகவரி மறந்து போச்சா? கவலையே வேண்டாம். CTRL + Shift + T என்ற கீகளை அழுத்துங்கள். உடனே மூடிய தளம் திறக்கப்படும்.3. இணைய தளம் ஒன்றை உடனடியாக புக்மார்க் செய்திட வேண்டுமா? உடனே கண்ட்ரோல் + டி கீகளை CTRL + ஈ அழுத்துங்கள்.4.புக் மார்க் செய்த பெயர்களை வரிசைப்படுத்த வேண்டுமா! புக்மார்க்ஸ் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இப்போது புக்மார்க்ஸ் பட்டியல் கிடைக்கும். இதற்குள்ளாக ஏதேனும் ஒரு இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் Sort by Name என்பதில் கிளிக் செய்தால் அனைத்து புக்மார்க்குகளும் ஆங்கில அகர வரிசைப்படி அமைக்கப்பட்டிருக்கும்.5. அட்ரஸ் பார் உடனே செல்ல: இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வேறு ஒரு தளம் பார்க்க வேண்டி அட்ரஸ் பாருக்குக் கர்சரைக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். உடனே மவுஸை எல்லாம் பிடிக்க வேண்டாம். எப் 6 கீயை அழுத்துங்கள். கர்சர் அட்ரஸ் பாரில் ரெடியாக இருக்கும்.6. புதிய டேப் ஒன்றை விரைவாகத் திறக்க வேண்டுமா? CTRL + T அழுத்துங்கள்; புதிய டேப் திறக்கப்பட்டு ரெடியாக இருக்கும். பல தளங்கள் திறக்கப்பட்டுள்ளன. முதலில் திறக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தளத்திற்குச் செல்ல வேண்டுமானால் கண்ட்ரோல் அழுத்தி அந்த தளம் எத்தனாவது டேப்பாக உள்ளதோ அந்த எண்ணை அழுத்துங்கள். உடனே அந்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதே போல தளம் ஒன்றில் இன்னொரு தளத்திற்கான லிங்க் உள்ளதா? அதற்குச் செல்ல வேண்டுமா? அந்த லிங்க்கில் கிளிக் செய்தால் அதனைத் தந்த தளம் காணாமல் போய் லிங்க்கிற்கான தளம் கிடைக்கும். அதற்குப் பதிலாக கண்ட்ரோல் அழுத்தியவாறே அந்த லிங்க்கில் கிளிக் செய் திடுங்கள். லிங்க் தொடர் பான தளம் புதிய டேபில் திறக்கப்படும். இந்த லிங்க் தந்த தளமும் அப்படியே பயன்பாட்டிற்கு இருக்கும். (இதற்கு இன்னொரு வழி உங்களுடைய மவுஸில் ஸ்குரோலிங் வீல் இருந்தால் அதனை அழுத்துவது) லிங்க் தரும் தளத்தினை புதிய விண்டோவில் திறக்க விரும்பினால் லிங்க்கில் கிளிக் செய்திடுகையில் ஷிப்ட் கீயையும் அழுத்தவும்.7. வேகமாக தளங்களைப் பார்வையிட: வெப் சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீளமான அதில் அடுத்தடுத்த பக்கத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்காக கைகளை எடுத்து பேஜ் அப் அல்லது டவுண் அழுத்த தேவையில்லை. ஸ்பேஸ் பார் அழுத்தினாலே போதும். தளமானது கீழ் நோக்கிய பக்கங்களுக்குச் செல்லும். வேகமாகச் சென்று விட்டீர் கள். இப்போது மேல் நோக்கி வர வேண்டும். உடனே ஸ்பேஸ் பாரினை ஷிப்ட் கீயுடன் சேர்த்து அழுத்தவும்.8. முழுத்திரையில் வெப்சைட்: மானிட்டரின் முழுத் திரையிலும் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். எப் 11 கீயை அழுத்துங்கள். திரை முழுவதும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளம் காட்டப்படும். பிரவுசரின் கண்ட்ரோல் பிரிவுகள் எதுவும் இருக்காது. மீண்டும் பிரவுசரின் கண்ட்ரோல்கள் வேண்டுமா? மீண்டும் எப்11 அழுத்துங்கள்.9. பிரியமான தளங்களை மொத்தமாகத் திறக்க: தினந்தோறும் சில குறிப்பிட்டதளங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் திறந்து வைத்துப் பணியாற்ற விரும்புகிறீர்களா? புக் மார்க் சென்று அல்லது லொகேஷன் பார் கிளிக் செய்து ஒவ்வொன்றாகத் திறக்கத் தேவையில்லை. முதலில் உங்கள் புக் மார்க் பிரிவில் ஒரு போல்டரை உருவாக்குங்கள். இதில் நீங்கள் ஒரே நேரத்தில் திறக்க விரும்பும் அனைத்து தள முகவரிகளும் புக் மார்க்காக இருக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கிய பின் அந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Open in Tabs” என்பதை அழுத்தவும். உங்கள் பிரியமான தளங்கள் அனைத்தும் டேப்களில் திறக்கப்பட்டு தயாராக உங்கள் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும்.பயர்பாக்ஸ் 2.0.0.15இரு வாரங்களுக்கு முன் ஜூலை 1ல் பயர்பாக்ஸ் 2.0.0.15 பதிப்பு வெளியிடப் பட்டது. என்ன விழிக்கிறீர்கள்? பயர்பாக்ஸ் பதிப்பு 3 தான் வெளியிடப்பட்டு உலக சாதனை புரிந்து பலரால் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கையில் எதற்காக இந்த பதிப்பு என்று தானே? மேற்கொண்டு படியுங்கள். பயர்பாக்ஸ் பதிப்பு 2க்கான அப்டேட்டட் பதிப்பு இது. இன்னும் பதிப்பு 2னைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு அதனை இன்னும் பாதுகாப்பாகவும் ஸ்திரமாகவும் ஆக்கிட மொஸில்லா எடுக்கும் நடவடிக்கையே இந்த பதிப்பின் வெளியீடு ஆகும. எனவே நீங்கள் இன்னும் பதிப்பு 2னை பயன்படுத்திக் கொண்டிருந்தால் இந்த புதிய பதிப்பினை http://www.mozilla.com/enUS/firefox%20/allolder.htmlஎன்ற முகவரியில் இருந்து இறக்கிப் பயன்படுத்தவும். இந்த முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றவுடன் உங்களுக்கான மொழி மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேர்ந்தெடுத்து பின் டவுண்லோட் லிங்க்கில் கிளிக் செய்திடவும். அல்லது பயர்பாக்ஸ் தளத்திற்குச் சென்று அங்கு ஹெல்ப் மெனுவிற்குச் செல்லவும். அதில் செக் பார் அப்டேட்ஸ் என்பதில் கிளிக் செய்தால் தானாக உங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 2 மேம்படுத்தப்படும். பயர்பாக்ஸ் பதிப்பு 3 இருந்தாலும் பயர்பாக்ஸ் 2க்கான இது போன்ற அப்டேட்டட் பதிப்புகள் வரும் டிசம்பர் வரை கிடைக்கும் என மொஸில்லா அறிவித்துள்ளது. பயர்பாக்ஸ் செஷன் ரெஸ்டோர்ம்பலரும் பயன்படுத்தும் பயர்பாக்ஸ் பிரவுசரில் தற்போது பல புதுமையான வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று செஷன் ரெஸ்டோர். அடிக்கடி கம்ப்யூட்டர் மற்றும் அதற்குச் செல்லும் மின்சாரம் காலை வாரிவிடும் நிலையில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும். பயர்பாக்ஸ் மூலம் நீங்கள் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் ஏதேனும் நடந்து சிஸ்டம் கிராஷ் ஆனாலோ அல்லது பிரவுசருக்குப் பிரச்னை ஏற்பட்டு உங்கள் இணைய உலா இடையே அறுந்து போனாலோ மீண்டும் அவற்றைப் பெற என்ன செய்வீர்கள்? லொகேஷன் பார் அழுத்தி அட்ரஸ் பெற முயற்சி செய்வீர்கள். ஆனால் இந்த வழி பலனளிக்காது. இதற்கெனவே பயர்பாக்ஸ் ரெஸ்டோர் செஷன் வசதியைத் தந்துள்ளது. எடுத்துக் காட்டாக நீங்கள் பத்து தளங்களை பயர்பாக்ஸில் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில் கிராஷ் ஏற்பட்டு பயர்பாக்ஸ் மூடப்படுகிறது. மீண்டும் திறக்கையில்ஜ் பயர்பாக்ஸ் முன்பு நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த தளங்களைக் காட்டவா என்று கேள்வி கேட்டு அந்த பத்து தளங்களும் மீண்டும் காட்டப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதைத் தான் இந்த வசதி தருகிறது. இந்த செஷன் ரெஸ்டோர் வசதியினை செட் அப் செய்திட முதலில் Tools, Options செல்லவும். அங்கு Main டேபில் முதல் பிரிவைப் பார்க்கவும். அதில் “When Firefox starts என்று இருக்கும். இதில் கிடைக்கும் கீழ் விரி மெனுவைப் பயன்படுத்தி கிடைக்கும் பிரிவுகளில் “Show my windows and tabs from last time” என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதன் பின் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் எந்த தளமும் பிரச்னையினால் மீண்டும் கிடைக்காமல் இருக்காது. இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்த வசதியினை மேற்கொள்ள பயர்பாக்ஸ் தொகுப்பை நாம் தயார் படுத்தியிருக்க வேண்டும் இல்லையா? அதாவது பயர்பாக்ஸ் தான் மேற்கொண்டிருந்த தளங்களை நினைவில் வைத்திருந்தால் தானே மீண்டும் அவற்றைக் கொண்டு வர முடியும். அப்படியானால் எத்தனை நிமிடங்களுக்கான இடைவெளியில் இந்த பிரவுசர் பணியினை சேவ் செய்திட வேண்டும் என்று நாம் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும் அல்லவா? இதனை எப்படி செட் செய்வது?இதற்கு பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து அட்ரஸ் பாரில் “about:config” என்று டைப் செய்து என்டர் தட்டவும். அடுத்து வரும் திரையில் Filter பாக்ஸ் எங்கிருக்கிறது என்று பார்த்து அதில் “browser.sessionstore.interval” என டைப் செய்திடவும். இப்போது ஒரு என்ட்ரி கிடைக்கப்பெறும். அதில் இருமுறை கிளிக் செய்திடவும். அதில் கிளிக் செய்து எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை பயர்பாக்ஸ் உங்கள் பிரவுசிங் தகவல்களை சேவ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடலாம். 10 விநாடிகள் என்றால் 10000 என டைப் செய்திடவும். ஐந்து விநாடிகள் என்றால் 5000 என டைப் செய்திடவும். ஒரு நிமிடத்திற்கு 60000 எனவும் டைப் செய்திடவும். இனி நீங்கள் பிரவுஸ் செய்திடுகையில் செட் செய்த கால அவகாசத்திற்கு ஏற்ப பிரவுஸ் செய்திடும் தகவல்கள் சேவ் செய்யப்படும். அதன் மூலம் பயர்பாக்ஸ் கிராஷ் ஆனாலும் தளங்கள் நமக்குக் கிடைக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக