வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த வந்துள்ள உள்நாட்டு போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள்.இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்ததில் மிகவும் வளர்சியுடைய நகரமாக அமைந்துள்ளது.
பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்திற்காக ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீபம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. தொலைவிலுள்ள இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளது.
பாடசாலைகள்
- வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை (1878 இல் அமைக்கப்பட்டது. வவுனியாவின் முதல் பாடசாலை என்ந் பெருமையை இது தட்டிச்செல்கின்றது.)
- வவுனியா மகாவித்தியாலயம்.
- இறம்பைகுளம் மகளிர் மகா வித்தியாலயம்.
- வவுனியா பெரிய கோமரசன் குளம் மகாவித்தியாலயம்.
- வவுனியா தரணிகுளம் கணேஸ் வித்தியாலயம்.
- வவுனியா விபுலாநந்தா கல்லூரி.
- சைவப்பிரகாச வித்தியாலயம்.
- வவுனியா இந்துக் கல்லூரி.
- வவுனியா பூந்தோட்டம் தமிழ் மகாவித்தியாலயம்.
- ஓமந்தை மத்திய கல்லூரி.
- வவுனியா சர்வதேசப் பாடசாலை.
தொழில் நுட்பக் கல்லூரி
வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.
தனியார் கல்வி நிலையங்கள்
- சண்முகா கணினி பயிற்சி நிலையம் (http://shanmugha.blogspot.com)
- IVM Creation கணினி பயிற்சி நிலையம் ( http://ivmcreation.blogspot.com )
- Univac கணினி பயிற்சி நிலையம்
தொலைத் தொடர்பு
அஞ்சல்
வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் (Agency) அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.
- அஞ்சற் குறியீடு: 43000
தொலைபேசி
குறியீடு: 024 (வேறு மாவட்டங்களில் இருந்தும் நகர்பேசியூடாகத் தொடர்பு கொள்ள).
- ஆரம்பிக்கும் இலக்கங்கள்
- 024-2 வவுனியா இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்.
- 024-4 வவுனியா சண்ரெல்
- 024-5 வவுனியா லங்காபெல்
- 024-7 வவுனியா டயலொக்
- 060-224 வவுனியா இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் CDMA இணைப்பு
கம்பி இணைப்புக்கள்
இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனம்
கம்பியற்ற இணைப்பு
- CDMA இணைப்புக்கள்
- சண்ரெல்
- இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
- லங்காபெல்
- டயலொக்
- TDMA (GSM) இணைப்புக்கள்
- மொபிற்றல், இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
- டயலொக்
- ஹட்ச்
- ரிகோ
இணைய இணைப்பு
அக்டோபர் 2007 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைத் தொலைத் தொடர்பு நிலைய இலக்கங்களுக்கு அகலப்பட்டை இணைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி
வவுனியாவில் இந்தியாவின் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் மீள் ஒளி பரப்பு நிலையம் அமைந்துள்ளது. ஆயினும் இவற்றின் சட்ட அனுமதி சம்பந்தமாக தெளிவான நிலையில்லை. இது தவிர அதிகாரபூர்வமாக தமிழ் தொலைக்காட்சியொன்றை நடத்துவதற்கு முன்னோட்டம் ஒன்றும் பல மாதங்களாக நடந்தவண்ணமுள்ளன.
வானொலிகள்
- இலங்கை வானொலி வன்னிச்சேவை
- பண்பலை நாதம்
- வன்னியின் குரல் (வர்த்தக விளம்பரசேவை)
பத்திரிகைகள்/சஞ்சிகைகள்
- நிலம் - கவி இதழ்
- தேடல் - இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது
- பூங்கனி - மாதமொருமுறை
மத வழிபாட்டுத் தலங்கள்
வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
இந்து மதம்
- சித்திவிநாயகர் ஆலயம்-குடியிருப்பு
- அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில்-கோவில்குளம்
- ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம் - பூந்தோட்டம்
- அருள்மிகு சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு தேவஸ்தானம்
- காளிகோயில்-குருமன்காடு
- ஸ்ரீ கந்தசாமி கோயில்
- சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
- பழனி மலை முருகன் கோயில்-சிதம்பரபுரம்
- ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
- சமளன்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில்
- ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- சமளன்குளம்
- ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- தெற்கிலுப்பைக்குளம்
- ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்-தெற்கிலுப்பைக்குளம்
- ஐயப்பன் தேவஸ்தானம்-கோவில்குளம்.
கிறீஸ்தவ மதம்
- கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
- புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
- புனித செபஸ்ரியார் தேவாலயம்-தெற்கிலுப்பை
- குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்குளம்
போக்குவரத்து
வவுனியாவில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு எவ்வித நேரடிப் போக்குவரத்தும் தற்போது இல்லை. அதாவது பேருந்து மற்றும் தொடருந்துமதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித தனியார், அரச மற்றும் அரசசார்பற்ற வாகனங்களும் வவுனியாவைவிட்டு வெளிச்செல்லவும். பிற மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்குள் வருவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. அரசாங்க அதிபர், அம்புலன்ஸ், எரிபொருள் டாங்கர்கள் சென்றுவர அனுமதி உள்ளது. சேவைகள் இரண்டும்
பாரவூர்திகள்
வவுனியாவில் இருந்து கொழும்பு உட்பட தென்பகுதிகளுக்கு செல்லும் பாரவூர்திகள் அனுராதபுரம், மதவாச்சி மட்டுமே செல்லலாம் எனினும் திருகோணமலைக்கு வானங்களிற் செல்வதற்குத் தடை ஏதும் இல்லை. தற்போது இவ்வனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இத்தடைமூலம் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன் தேவையற்ற நேரவிரயமும் ஏற்படுகின்றது.
தொடருந்து
வவுனியா தொடருந்து நிலையத்திலிருந்தும் வவுனியாவிற்குமான சேவைகள் இடம் பெறுகின்றன. புகையிரதப் பயணச் சீட்டுக்களை வவுனியா புகையிரத நிலையத்தில் 7 நாட்கள் முன்னையதாகவே காலை 7 மணிமுதல் காலை 10 மணிவரை செய்துகொள்ளவியலும்.
- கொழும்பு - வவுனியா (ரஜரட்ட ரெஜினா) - கொழும்பிலிருந்து மாலை 1:45
- கொழும்பு - வவுனியா (கடுகதி) - கொழும்பிலிருந்து மாலை 4:20
- கொழும்பு - வவுனியா (யாழ்தேவி) - கொழும்பிலிருந்து இரவு 10:00
பேருந்து
வவுனியாவிலிருத்தும் வவுனியாவிற்கும் தனியார் மற்றும் அரசாங்க பேருந்து சேவைகள் இடம் பெறுகின்றன.வவுனியாவிலிருந்து கொழும்பிற்கோ அல்லது கொழும்பிலிருந்து வவுனியாவிற்கோ இரவில் பயணம் செல்லும் பயணிகள் புத்தளமூடான பாதையில் வழிப்பறிக்கொள்ளைகள் நடைபெறுவதால் இப்பாதையூடான பயணத்தைத் தவிர்த்தல் நல்லது. தவிர அதிகரித்துவரும் சோதனை நடைமுறைகளால் பெரும்பாலானவர்கள் தொடருந்தில் பயணிப்பதையே விரும்புகின்றார்கள்.
- வவுனியா - மன்னார்
- வவுனியா - திருகோணமலை
- வவுனியா - மட்டக்களப்பு
- வவுனியா - அனுராதபுரம்
- வவுனியா - கொழும்பு (குருநாகல் மற்றும் புத்தளம் ஊடாக இருவேறு வழிகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக